ADDED : மார் 25, 2026 06:28 PM
கிண்டி:சட்டக்கல்லுாரி மாணவரை உருட்டுக்கட்டையால் தாக்கிய முதியவரை, போலீசார் கைது செய்தனர்.
வேளச்சேரி, நேரு நகரை சேர்ந்தவர் கோகுல், 29. ஆந்திர மாநிலத்தில் சட்டம் படித்து வருகிறார். நேற்று முன்தினம், வேளச்சேரியில் இருந்து வீடு நோக்கி, இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார்.
நுாறடி சாலையில் சென்றபோது, குறுக்கே வந்த ஆட்டோவில் மோதாமல் இருக்க, இருசக்கர வாகனத்தை கோகுல் திருப்பியபோது, கண்ணன், 60, என்பவர் ஓட்டி வந்த மாற்றொரு இருசக்கர வாகனம், கோகுல் வாகனம் மீது மோதுவது போல் வந்துள்ளது. ஆனால் மோதவில்லை.
இதில் ஏற்பட்ட தகராறில், கோகுல் கெட்டவார்த்தையால் பேசியதாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த கண்ணன், கீழே கிடந்த உருட்டுக்கட்டையால், கோகுல் தலையில் தாக்கினார்.
புகாரின்படி வழக்கு பதிந்த கிண்டி போலீசார், நேற்று கண்ணனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
