/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முதியவரிடம் ரூ.4.60 லட்சம் ஆன்லைனில் மோசடி
/
முதியவரிடம் ரூ.4.60 லட்சம் ஆன்லைனில் மோசடி
ADDED : டிச 08, 2024 12:11 AM
சென்னை, டிச. 8-
மின் கட்டணம் செலுத்தவில்லை எனக்கூறி, 'ஆன்லைன்' வாயிலாக முதியவரிடம் 4.60 லட்சம் ரூபாய் பறித்தவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கோட்டூர் கார்டன்ஸ், 4வது பிரதான தெருவைச் சேர்ந்தவர் ராஜசேகரன், 66. கடந்த 3ம் தேதி, இவரது மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசிய மர்மநபர், 'நீங்கள் மின் கட்டணம் செலுத்தவில்லை' என்று அதிகாரி தொனியில் பேசியுள்ளார். தொடர்ந்து, 'லிங்க்' ஒன்றை அனுப்புகிறேன். அதை 'கிளிக்' செய்து கட்டணத்தை செலுத்திக் கொள்ளலாம்' எனக்கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.
அவரது பேச்சை உண்மை என நம்பிய ராஜசேகரன், மொபைல் போனில் வந்த லிங்க்கை 'கிளிக்' செய்துள்ளார். சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து, 4.60 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது என, குறுஞ்செய்தி வந்துள்ளது.
இதை அறிந்த முதியவர் கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசில் நேற்று புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.