/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நோய் தாக்கத்தால் முதியவர் தற்கொலை
/
நோய் தாக்கத்தால் முதியவர் தற்கொலை
ADDED : மே 06, 2025 11:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓட்டேரி, ஓட்டேரி, நக்கீரன் தெரு பகுதியில் வசித்தவர் நாகராஜன், 68; சொந்தமாக மளிகை கடை நடத்தி வந்தார். இவரது மனைவி கனகசுந்தரி, 57.
கடந்த 2019ம் ஆண்டு முதல் நீரிழிவு நோய் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவ்வப்போது டயாலிசிஸ் செய்ய வேண்டி இருந்ததால், கடைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
கடையை, மனைவி பார்த்து வந்த வேளையில், நேற்று முன்தினம், வீட்டில் யாருமில்லாத நிலையில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலின்பேரில், சம்பவ இடம் சென்ற ஓட்டேரி போலீசார், சடலத்தை கைப்பற்றி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.