/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறுவன் ஓட்டிய கார் மோதி விபத்து சிகிச்சையிலிருந்த முதியவர் உயிரிழப்பு

ADDED : ஏப் 11, 2025 12:06 AM
வடபழனி,
வடபழனியை சேர்ந்தவர் ஷாம், 45. இவர், கடந்த 7ம் தேதி இரவு, தனது 14 வயது மகனிடம் காரின் சாவியை கொடுத்து, கார் மீது கவர் போடுமாறு கூறி அனுப்பினார்.
அப்போது, சிறுவன் மற்றும் அவரது நண்பர் சேர்ந்து, காரை ஓட்டிப்பார்க்க, கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் நடந்து சென்ற முதியவர், பைக் மற்றும் ஆட்டோ மீது மோதியது.
இதில், சாலிகிராமம், தனலட்சுமி காலனியை சேர்ந்த மகாலிங்கம், 69, என்பவர் தலை மற்றும் உடலில் படுகாயமடைத்தார்.
வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மகாலிங்கம், மேல் சிகிச்சைக்காக, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து விசாரித்த பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார், ஓட்டுநர் உரிமம் இல்லாத மகனிடம் காரை கொடுத்த ஷாமை கைது செய்தனர்.
மேலும், காரை ஓட்டிய சிறுவன் மற்றும் அவரது நண்பரையும் கைது செய்து, அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மகாலிங்கம், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இதையடுத்து, கார் ஓட்டிய சிறுவன் மீது, அலட்சியமாக செயல்பட்டு மரணத்தை ஏற்படுத்துதல் என்ற பிரிவின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.