/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வானகரம் அருகே லாரி மோதி முதியவர் பலி
/
வானகரம் அருகே லாரி மோதி முதியவர் பலி
ADDED : செப் 16, 2025 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரவாயில்:கோயம்பேடு சந்தையில் காய்கறிகளை வாங்கிக் கொண்டு, உறவினர் வீட்டிற்கு பைக்கில் சென்ற முதியவர், லாரி மோதி பலியானார்.
அயனாவரம் மேட்டு தெருவை சேர்ந்தவர் ஜெகநாதன், 77. இவர், நேற்று மதியம் கோயம்பேடு சந்தையில், காய்கறிகளை வாங்கிக் கொண்டு, பூந்தமல்லியில் உள்ள உறவினரை பார்க்க, தன் டி.வி.எஸ்., ஸ்கூட்டி வாகனத்தில் சென்றார்.
வானகரம் அருகே சென்றபோது, நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். அப்போது பின்னால் வந்த லாரி, அவரின் மீது ஏறி இறங்கியது.
இதில், ஜெகநாதன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
மதுரவாயல் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.