ADDED : ஜன 05, 2025 12:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: அண்ணாநகர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 68; ஓய்வு பெற்ற கப்பல் துறை அதிகாரி.
நேற்று காலை இருசக்கர வாகனத்தில் பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். மதுரவாயல் ரேஷன் கடை பேருந்து நிறுத்தம் அருகே, பின்னால் வந்த டிப்பர் லாரி, ராஜேந்திரனின் இருசக்கர வாகனத்தில் மோதியதில் கீழே விழுந்தார்.
அப்போது லாரியின் பின் சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே பலியானார்.
கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் உடலை மீட்டு, விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் ராஜிவ்காந்தி, 36, என்பவரை கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர்.