/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலை பள்ளத்தால் விபத்து பஸ்சில் சிக்கிய முதியவர் பலி
/
சாலை பள்ளத்தால் விபத்து பஸ்சில் சிக்கிய முதியவர் பலி
சாலை பள்ளத்தால் விபத்து பஸ்சில் சிக்கிய முதியவர் பலி
சாலை பள்ளத்தால் விபத்து பஸ்சில் சிக்கிய முதியவர் பலி
ADDED : அக் 23, 2025 12:39 AM
தாம்பரம்: சாலை பள்ளத்தில் இறங்கிய இருசக்கர வாகனத்தில் இருந்து, நிலைதடுமாறி கீழே விழுந்த முதியவர் பேருந்தில் சிக்கி உயிரிழந்தார்.
புதுபெருங்களத்துார், புத்தர் தெருவைச் சேர்ந்தவர் ஜம்புலிங்கம், 74. கார்த்திகேயன் நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகரன், 64. இருவரும், நேற்று முன்தினம் இரவு, 'ஹோண்டா டியோ' ஸ்கூட்டரில், குரோம்பேட்டையில் இருந்து பெருங்களத்துார் நோக்கி சென்றனர்.
தாம்பரம் ஜி.எஸ்.டி., சாலையில், ராதா பெட்ரோல் 'பங்க்' எதிரே வந்தபோது, சாலையில் இருந்த பள்ளத்தில் வாகனம் இறங்கி, நிலைதடுமாறியதில் இருவரும் கீழே விழுந்தனர்.
அந்நேரம், பின்னால் வந்த மாநகர பேருந்து அவர்கள் மீது மோதியது. பலத்த காயமடைந்த இருவரையும் அங்கிருந்தோர் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம், தாம்பரத்தில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, நேற்று காலை ஜம்புலிங்கம், உயிரிழந்தார்.
விபத்து குறித்து, குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.