/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
குளவி கொட்டியதில் முதியவர் இறப்பு
/
குளவி கொட்டியதில் முதியவர் இறப்பு
PUBLISHED ON : செப் 27, 2025 12:00 AM

ஆவடி, மரக்கிளைகளை வெட்டிய முதியவர், குளவிகள் கொட்டியதில் இறந்தார்.
ஆவடி அருகே, காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நீலமேகம், 80. தன் வீட்டின் அருகே உள்ள மரக் கிளைகளை, நேற்று முன்தினம் இரவு அரிவாளால் வெட்டினார்.
அப்போது, மரக்கிளையில் கட்டியிருந்த கூடு உடைந்து குளவிகள் வெளியேறி, நீலமேகத்தை முகம், கை, கால்களில் கொட்டின.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, ஆவடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு முதியவர் அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு, தீவிர சிகிச்சை பெற்று வந்த முதியவர் நீலமேகம், நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.