/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வாரிய குடியிருப்பு படிக்கட்டின் கான்கிரீட் பெயர்ந்து முதியவர் காயம்

ADDED : மே 19, 2025 01:43 AM

சென்னை:பட்டினப்பாக்கம், சீனிவாசபுரத்தில், 1965 - 1977ம் ஆண்டில் கட்டப்பட்ட குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் உள்ளன. அங்குள்ள 'பாம்பே பில்டிங்' என அழைக்கப்படும் குடியிருப்பின் நான்காவது மாடியில், கோவிந்தராஜ், 60, என்பவர் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
இவர், ஐந்து மாதங்களுக்கு முன் அந்த வீட்டை காலி செய்து, வேறு இடத்திற்கு சென்று விட்டனர். ஆனால், பொருட்கள் மாற்றப்படாமல் இருந்தது.
இந்த நிலையில், நேற்று மாலை கோவிந்தராஜ் உள்ளிட்ட நான்கு பேர், நான்காவது மாடியில் இருந்து மூன்றாவது மாடி வழியாக 'பிரிஜ்'ஜை துாக்கி வந்தனர்.
அப்போது, மாடி படிக்கட்டின் மேற்பகுதியில் இருந்து கான்கிரீட் கூரை பெயர்ந்து விழுந்தது. இதில் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் சிக்கினர். பட்டினப்பாக்கம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து, அவர்களை மீட்டனர்.
இதில், கோவிந்தராஜுக்கு காலில் காயம் ஏற்பட்டது. அவருக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மற்றவர்கள் லேசான காயத்துடன் தப்பினர். விபத்து குறித்து, பட்டினப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.