/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கூவம் ஆற்றில் தவறி விழுந்த முதியவர் மீட்பு
/
கூவம் ஆற்றில் தவறி விழுந்த முதியவர் மீட்பு
ADDED : அக் 23, 2025 12:47 AM

சென்னை: சூளைமேடில், கூவம் ஆற்றில் தவறி விழுந்து தத் தளித்துக் கொண்டிருந்த முதியவரை போலீசார் மீட்டனர்.
சூளைமேடு, கோசுமணி தெருவைச் சேர்ந்தவர் பழனி, 74. இவர், நேற்று அதிகாலை வீட்டின் அருகே உள்ள கூவம் ஆற்றில் தவறி விழுந்து, தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்.
சற்று துாரத்தில் குழாய் ஒன்றை கெட்டியாக பிடித்துக் கொண்ட முதியவர், உதவக்கோரி சத்தம் போட்டுள்ளார். இதை கேட்ட அப்பகுதிமக்கள், சூளைமேடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த சூளைமேடு போலீசார், முதியவரை பத்திரமாக மீட்டு ஆசுவாசப்படுத்தி குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தனர். சிறப்பாக செயல்பட்டு முதியவரை மீட்ட போலீசாரை, அப்பகுதிமக்கள் வெகுவாக பாராட்டினர்.