/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலையை கடக்க முயன்ற மூதாட்டி லாரி மோதி பலி
/
சாலையை கடக்க முயன்ற மூதாட்டி லாரி மோதி பலி
ADDED : அக் 23, 2025 12:40 AM

ஆலந்துார்:: சாலையை கடக்க முயன்ற மூதாட்டி: உயிரிழந்தார்.: ஆலந்துார், சிமென்ட் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் வசந்தகுமாரி, 72. இவர், தன் வீட்டின் அருகே உள்ள ஜி.எஸ்.டி., சாலையை கடக்க முயன்றார். அப்போது, திரிசூலத்தில் இருந்து 'எம் சாண்டு' ஏற்றி ராமாபுரத்திற்கு சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி, அவர் மீது மோதியது.
இந்த விபத்தில், லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில் மூதாட்டி தலை நசுங்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு போலீசார், விபத்து ஏற்படுத்திய டிப்பர் லாரி ஓட்டுநரான திரிசூலத்தைச் சேர்ந்த கன்னியப்பன், 30, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர். இந்த விபத்தால், ஜி.எஸ்.டி., சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.