/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிகிச்சைக்கு வந்த மூதாட்டி ஏர்போர்ட்டில் உயிரிழப்பு
/
சிகிச்சைக்கு வந்த மூதாட்டி ஏர்போர்ட்டில் உயிரிழப்பு
சிகிச்சைக்கு வந்த மூதாட்டி ஏர்போர்ட்டில் உயிரிழப்பு
சிகிச்சைக்கு வந்த மூதாட்டி ஏர்போர்ட்டில் உயிரிழப்பு
ADDED : ஜூலை 09, 2025 12:12 AM
சென்னை, சிகிச்சைக்காக ஹைதராபாத் செல்ல விருந்த அசாம் மாநில மூதாட்டி, சென்னை விமான நிலையத்தில் உயிரிழந்தார்.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் அனு பொருச், 65. இவர், உயர் சிகிச்சைக்காக ஹைதராபாத் செல்ல திட்டமிட்டிருந்தார்.
இதையடுத்து அனுவின் மகள் மற்றும் மருமகன், கவுஹாத்தியில் இருந்து 'இண்டிகோ' விமானத்தில் நேற்று இரவு 7:30 மணிக்கு, சென்னை விமான நிலையம் வந்தனர். 'டிரன்சிட்' முறையில் ஹைதராபாத் நகருக்கு செல்ல, வளாகத்தில் காத்திருந்தனர். அப்போது, மூதாட்டிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு, மயங்கி கீழே விழுந்தார். அங்கு விரைந்த மருத்துவ குழுவினர், அவரை மீட்டு, விமான நிலைய மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இரவு 10:00 மணிக்கு உயிரிழந்தார். மாரடைப்பு ஏற்பட்டதால் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவரது உடலை கைப்பற்றிய சென்னை விமான நிலைய போலீசார், பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.