/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மெட்ரோ பணியில் கம்பி விழுந்து மூதாட்டி காயம்
/
மெட்ரோ பணியில் கம்பி விழுந்து மூதாட்டி காயம்
ADDED : நவ 21, 2025 04:35 AM
கோயம்பேடு: சித்தாலப்பாக்கத்தைச் சேர்ந்தவர் கஸ்துாரி, 70. பூ வாங்க, நேற்று காலை, கோயம்பேடு பூ சந்தைக்கு ஆட்டோவில் சென்றார்.
காலை 9:30 மணிக்கு, கோயம்பேடு பூ சந்தை 'இ' சாலையில், நான்கு எண் நுழைவாயல் அருகே, ஆட்டோவில் அமர்ந்திருந்தார்.
அப்பகுதியில் நடந்து வரும், கோயம்பேடு - பூந்தமல்லி வழித்தட மெட்ரோ ரயில் திட்ட பணி இடத்தில் இருந்து 3 அடி நீள இரும்பு குழாய், ஆட்டோ மீது விழுந்தது.
இதில் ஆட்டோ சேதமடைந்ததோடு, உள்ளே இருந்த மூதாட்டி கஸ்துாரியின் வயிறு மற்றும் தோள் பகுதியில் காயம் ஏற்ப்பட்டது. அங்கிருந்தோர் அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். கோயம்பேடு போலீசார் விசாரிக்கின்றனர்.

