ஆவணமில்லாத ரூ.2 லட்சம்: தேர்தல் அதிகாரிகள் பறிமுதல்
ஆவணமில்லாத ரூ.2 லட்சம்: தேர்தல் அதிகாரிகள் பறிமுதல்
ADDED : ஏப் 05, 2026 10:34 PM
அ நிறம் | அளவு
மாதவரம்: உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட 2.52 லட்சம் ரூபாயை, தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
மாதவரம், பாடியநல்லுார் சுங்கச்சாவடி அருகே, தேர்தல் பறக்கும் படையினர், நேற்று மதியம் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, ரகுசேகர் என்பவர் ஓட்டி வந்த காரை பரிசோதித்தபோது, உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட 59,500 ரூபாயை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதேபோல், மஞ்சம்பாக்கம் சுங்கச்சாவடி அருகே, ரீது டோமர் என்பவர் ஓட்டி வந்த காரில் 1.17 லட்சம் ரூபாயும் கைப்பற்றப்பட்டது.
திருநின்றவூர், சி.டி.எச்., சாலையில், வேல்முருகன் என்பவர், உரிய ஆவணங்களின்றி 'மஹிந்திரா பொலீரோ' காரில் 76,420 ரூபாய் எடுத்து சென்றது தெரிந்தது. அதையும் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
