/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'இந்தியாவில் தேர்தல்கள்' வினாடி - வினா போட்டி
/
'இந்தியாவில் தேர்தல்கள்' வினாடி - வினா போட்டி
ADDED : ஜன 18, 2024 12:48 AM
சென்னை,தேர்தல் நடைமுறைகளில் வாக்காளர்கள் பங்கேற்பதை அதிகரிக்கும் நோக்கத்தில் 14வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, 'ஸ்வீப்' திட்டத்தில், மாநில அளவிலான போட்டி நடைபெற உள்ளது.
'இந்தியாவில் தேர்தல்கள்' என்ற தலைப்பில் வரும் 21ம் தேதி காலை 11:00 முதல் 11:15 மணி வரை வினாடி வினா போட்டி நடைபெற உள்ளது.
பங்கேற்க விருப்பமுள்ளோர் 'https://www.erolls.tn.gov.in/Quiz2024/ என்ற இணையதளத்தில், இன்று மற்றும் நாளைக்குள், தங்கள் பெயர் மற்றும் விபரங்களை பதிவு செய்யலாம்.
தங்களது மொபைல் போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை கட்டாயமாக உள்ளீடு செய்ய வேண்டும்.
விபரங்களுக்கு 1800 4252 1950 என்ற மாநில உதவி மைய எண்ணிலும், '1950' என்ற மாவட்ட உதவி மைய எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
இத்தகவலை, சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.