/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின்சார 'ஏசி' ரயில் சேவை சனி, ஞாயிறுகளில் அதிகரிப்பு
/
மின்சார 'ஏசி' ரயில் சேவை சனி, ஞாயிறுகளில் அதிகரிப்பு
மின்சார 'ஏசி' ரயில் சேவை சனி, ஞாயிறுகளில் அதிகரிப்பு
மின்சார 'ஏசி' ரயில் சேவை சனி, ஞாயிறுகளில் அதிகரிப்பு
ADDED : மே 01, 2025 12:44 AM
சென்னை, சென்னையில் 12 பெட்டிகள் உடைய முதல் 'ஏசி' மின்சார ரயில் சேவை, கடந்த 20ம் தேதி துவங்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இருமார்க்கமாக தலா இரண்டு சேவையும், கடற்கரை - தாம்பரம் இடையே தலா ஒரு சேவையும், 'ஏசி' மின்சார ரயில் இயக்கப்படுகிறது.
'ஏசி' மின்சார ரயிலில் பல்வேறு வசதிகள் இருப்பினும், சேவையை அதிகரிக்கவும் பயணியர் கோரிக்கை வைத்தனர். இது சம்பந்தமாக பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
இதையடுத்து, 'ஏசி' மின்சார ரயில் சேவை எண்ணிக்கை ஆறில் இருந்து எட்டாக அதிகரித்து, இந்த மாற்றம் நாளை முதல் முதல் அமலுக்கு வரவுள்ளது.
இந்நிலையில், வார இறுதி நாட்களில் பயணியர் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், சனி, ஞாயிற்றுக்கிழமையில் தலா ஒரு 'ஏசி' மின்சார ரயில் சேவை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, தாம்பரத்தில் இருந்து சனிக்கிழமை மாலை 5:10 மணிக்கு 'ஏசி' மின்சார ரயில் புறப்பட்டு, சென்னை கடற்கரையை மாலை 6:05 மணிக்கு வந்தடையும்.
கடற்கரையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை 6:17 மணிக்கு 'ஏசி' ரயில் புறப்பட்டு, இரவு 7:12 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.
இந்த 'ஏசி' ரயில் சேவைக்கு ஏற்ப, கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் ஒரு மின்சார ரயிலின் நேரம் மாற்றி அமைக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

