/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
துாத்துக்குடியில் மின்சார பஸ், ஸ்கூட்டர்: 'வின்பாஸ்ட்' ஒப்பந்தம்
/
துாத்துக்குடியில் மின்சார பஸ், ஸ்கூட்டர்: 'வின்பாஸ்ட்' ஒப்பந்தம்
துாத்துக்குடியில் மின்சார பஸ், ஸ்கூட்டர்: 'வின்பாஸ்ட்' ஒப்பந்தம்
துாத்துக்குடியில் மின்சார பஸ், ஸ்கூட்டர்: 'வின்பாஸ்ட்' ஒப்பந்தம்
ADDED : டிச 05, 2025 02:20 AM
சென்னை : துாத்துக்குடியில் மின்சார பஸ், ஸ்கூட்டர் தயாரிக்கும் ஆலை அமைக்க, 490 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்ய, 'வின்பாஸ்ட்' நிறுவனத்துடன், தமிழக வழிகாட்டி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம், துாத்துக்குடி மாவட்டம், சிலாநத்தத்தில், மின்சார கார் உற்பத்தி செய்யும் ஆலை அமைத்துள்ளது. இதற்காக, 408 ஏக்கர் நிலத்தை, 'சிப்காட்' எனப்படும் தமிழக தொழில் முன்னேற்ற நிறுவனம் ஒதுக்கீடு செய்துள்ளது.
அந்த ஆலை ஆண்டுக்கு, 50,000 கார்களை தயாரிக்கும் திறன் உடையது. வின்பாஸ்ட் நிறுவனம், முதல் கட்டமாக, 4,000 கோடி ரூபாயும், அடுத்த பத்து ஆண்டுகளில், 16,000 கோடி ரூபாயும் முதலீடு செய்ய உள்ளது.
தற்போது, துாத்துக்குடியில் ஏற்கனவே உள்ள ஆலைக்கு அருகில், 490 ஏக்கர் நிலத்தை ஒதுக்க வின்பாஸ்ட், தமிழக வழிகாட்டி நிறுவனம் இடையில், நேற்று புரிந்தணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அங்கு மின்சார பஸ், ஸ்கூட்டர்கள் மற்றும் பேட்டரி ஆகியவற்றை தயாரிக்கும் ஆலை அமைக்கப்பட உள்ளது.
ரூ.4,300 கோடி முதலீடு இதுகுறித்து, தொழில் துறை அமைச்சர் ராஜா கூறியதாவது:
வின்பாஸ்ட் நிறுவனத்தின் பஸ் மற்றும் ஸ்கூட்டர், தமிழகத்தில் தயாரிக்கப்பட உள்ளன. தமிழகம் மீதான நம்பிக்கையை இது வலுப்படுத்துகிறது. வழிகாட்டி நிறுவனம், வின்பாஸ்ட் உடன் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இது, துாத்துக்குடியில் அந்நிறுவனத்தின் இரண்டாம் கட்டமாக, 4,300 கோடி ரூபாய் முதலீட் டை ஈர்க்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

