ADDED : ஜன 13, 2026 05:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வண்ணாரப்பேட்டை: பழைய வண்ணாரப்பேட்டை, பார்த்தசாரதி பிரதான தெருவைச் சேர்ந்த சையத் அன்வர் அலி, 59, நேற்று இரவு, தன் மனைவியுடன், 'சுசுகி பர்க்மேன்' எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் வள்ளலார் நகர் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, ஸ்கூட்டரின் பின்புறத்தில் திடீரென தீ பற்றியது. வாகனத்தை நிறுத்தி மனைவியுடன் தப்பினார். வண்ணாரப்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர். எனினும், ஸ்கூட்டர் தீக்கிரையானது.

