தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தீப்பற்றி எரிந்த புற்களால் மின் ரயில் சேவை பாதிப்பு

 தீப்பற்றி எரிந்த புற்களால் மின் ரயில் சேவை பாதிப்பு

 தீப்பற்றி எரிந்த புற்களால் மின் ரயில் சேவை பாதிப்பு


ADDED : மார் 15, 2026 05:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2026 05:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: தீ பற்றி எரிந்த புற்களால், கடற்கரை - தாம்பரம் இருமார்க்கத்திலும், மின் சார ரயில் சேவை, அரை மணி நேரம் பாதிக்கப்பட்டது.

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில், பணிமனை உள்ளது. இதன் அருகே உள்ள புற்களில், நேற்று காலை 11:35 மணிக்கு, திடீரென தீ பிடித்து எரிய துவங்கியது.

ரயில்வே போலீசார் மற்றும் ஊழியர்கள், தீயை அணைக்க முயன்றனர். எனினும், மளமளவென 40 மீட்டர் துாரத்திற்கு தீ பரவியது.

இதனால், தாம்பரம் - கடற்கரை தடத்தில், பூங்கா - கடற் கரை நிலையம் இடையே, ரயில் நிறுத்தப்பட்டது. அதேபோல், கடற்கரையில் இருந்து இயக்கவிருந்த ரயிலும் நிறுத்தப்பட்டது.இ தையடுத்து, எஸ்பிளனேடு தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்து, மதியம் 12:15 மணிக்கு தீயை அணைத்தனர். தீயால், இரு வழித்தடங்களில் அரை மணி நேரத்திற்கு மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us