ADDED : பிப் 07, 2024 12:24 AM
அ நிறம் | அளவு
தாம்பரம்,செங்கல்பட்டில் இருந்து, நேற்று காலை, மின்சார ரயில் ஒன்று பயணியருடன், சென்னை கடற்கரைக்கு சென்றது.
கூடுவாஞ்சேரி அருகே வந்தபோது, திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டு, ரயில் நின்றது. இதனால், அந்த ரயிலில் பயணம் செய்த பயணியர், ரயில்வே ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ரயில்வே ஊழியர்கள் விரைந்து சரிசெய்த பின், சிறிது நேரத்தில் ரயில் போக்குவரத்து தொடர்ந்தது.
