ADDED : அக் 02, 2024 12:26 AM
அ நிறம் | அளவு
சென்னை, 'காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை அட்டவணையின்படி, இன்று புறநகர் மின்சார ரயில் சேவை இயக்கப்படும்' என, சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை ரயில்வே கோட்டத்தில், சென்னை சென்ட்ரல் -- அரக்கோணம், சென்னை சென்ட்ரல் -- கும்மிடிப்பூண்டி, சென்னை கடற்கரை -- செங்கல்பட்டு உள்ளிட்ட வழித்தடங்களில், ஞாயிற்றுக்கிழமை அட்டவணைனயின்படி, இன்று மின்சார ரயில் சேவை இயக்கப்படும்.
670 மின்சார ரயில் சேவைகளுக்கு பதிலாக, 630 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
