/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஞாயிறு அட்டவணையில் மின்சார ரயில்கள்
/
ஞாயிறு அட்டவணையில் மின்சார ரயில்கள்
ADDED : அக் 11, 2024 12:21 AM
சென்னை, சென்னை ரயில்வே கோட்டத்தில், சென்னை சென்ட்ரல் -- அரக்கோணம், சென்னை சென்ட்ரல் -- கும்மிடிப்பூண்டி, சென்னை கடற்கரை -- செங்கல்பட்டு வழித்தடங்களில் தினமும், 650 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன.
ஞாயிற்றுக்கிழமைகளில் 500 மின்சார ரயில் சேவைகள் மட்டும் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், ஆயுதபூஜை தேசிய விடுமுறை தினத்தையொட்டி, சென்னை புறநகர் மின்சார ரயில்கள், இன்று, ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என, சென்னை ரயில் கோட்டம் நேற்று தெரிவித்துள்ளது.
மெட்ரோ ரயில்
சென்னையில் மெட்ரோ ரயில்கள் சேவை, அலுவலக நாட்களைவிட, விடுமுறை நாட்களில் சற்று குறைத்து இயக்கப்படும்.
அந்த வகையில், ஆயுதபூஜையொட்டி இன்று, சனிக்கிழமை கால அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகிறது.
காலை, 5:00 மணி முதல் இரவு, 11:00 மணி வரை இயக்கப்படும். காலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை; காலை 11:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை; இரவு 8:00 மணி முதல் 10:00 மணி வரையில், ஏழு நிமிட இடைவெளியிலும்; இரவு 10:00 முதல் 11:00 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.