ADDED : மே 18, 2025 03:25 AM

வேளச்சேரி:வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, 3வது பிரதான சாலையில் மின்மாற்றி உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு, திடீரென அதில் மின் கசிவு ஏற்பட்டு தீப்பற்றியது.
அதன் தீப்பொறி கீழே கிடந்த குப்பை கழிவுகளில் விழுந்து, தீ பிடித்து எரிய துவங்கியது. இந்த தீ விபத்தில் அங்கிருந்த மின் வடங்கள் எரிந்து நாசமாயின. தீ கொழுந்து விட்டு எரிந்ததால் பீதி ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த மின் வாரிய ஊழியர்கள், மின் இணைப்பை துண்டித்து, சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால், சில மணி நேரம் மின்சாரம் இன்றி அப்பகுதிவாசிகள் தவித்தனர்.
வேளச்சேரி பகுதியில், சமீபத்தில் மூன்றாவது மின் மாற்றி எரிந்து விபத்திற்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
எனவே, சம்பந்தப்பட்ட மின் வாரிய அதிகாரிகள், அனைத்து மின் மாற்றிகளையும் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.