/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின் விபத்து பெயின்டர்கள் இருவர் 'சீரியஸ்'
/
மின் விபத்து பெயின்டர்கள் இருவர் 'சீரியஸ்'
ADDED : பிப் 22, 2024 12:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி, ஆவடி அடுத்த வீராபுரம், கன்னியம்மன் நகரைச் சேர்ந்தவர்கள் சந்தோஷ், 25, மற்றும் தனசேகர். 32. இருவரும், திருமுல்லைவாயில், நாகம்மை நகர் ஒன்பதாவது தெருவில், சங்கர் என்பவரின் வீட்டில் பெயின்டிங் வேலை செய்து வந்தனர். வீட்டின் முதல் தளத்தில், நேற்று இருவரும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வீட்டின் அருகில் இருந்த உயர் மின்னழுத்த இணைப்பால் ஈர்க்கப்பட்டு, மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். திருமுல்லைவாயல் போலீசார் விசாரிக்கின்றனர்.