/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உயிர்களை காவு வாங்க காத்திருக்கும் மின் பெட்டிகள் எர்ணாவூரில் அபாயம்
/
உயிர்களை காவு வாங்க காத்திருக்கும் மின் பெட்டிகள் எர்ணாவூரில் அபாயம்
உயிர்களை காவு வாங்க காத்திருக்கும் மின் பெட்டிகள் எர்ணாவூரில் அபாயம்
உயிர்களை காவு வாங்க காத்திருக்கும் மின் பெட்டிகள் எர்ணாவூரில் அபாயம்
ADDED : நவ 11, 2025 12:46 AM

எண்ணுார்: கண்டமேனிக்கு திறந்து கிடக்கும் மின் பெட்டிகளால், எர்ணாவூர் மக்கள் தினசரி உயிர்பலி அபாயத்தில் பயணித்து வருகின்றனர்.
எர்ணாவூர், பஜனை கோவில் தெரு, மாகாளியம்மன் நகர், பிருந்தாவன் நகர், கன்னிலால் லே அவுட், காமராஜ் நகர் உட்பட, 15க்கும் மேற்பட்ட நகர்களில், 5,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இங்குள்ள வீடுகளுக்கு, மின் பகிர்மானத்திற்காக, ஆங்காங்கே தெரு சந்திப்புகளில் மின் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால், அவை துருப்பிடித்து உள்ளன. மேலும், கதவுகள் இல்லாமலும், மின் ஒயர்கள் தெரியும்படியும் உயிர்களை காவு வாங்கும் வகையில் அபாயகரமாக உள்ளது.
இது குறித்து, மின் வாரிய அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், செவி சாய்க்காமல் உள்ளனர்.
இது குறித்து, நான்காவது வார்டு மா., கம்யூ., கட்சி கவுன்சிலர் ஜெயராமன், பலமுறை மண்டல குழு கூட்டத்திலும், பருவமழை முன்னெச்சரிக்கை கூட்டங்களில் தொடர்ந்து, வலியுறுத்தி வருகிறார். ஆனால், மின்வாரிய அதிகாரிகள் செய்வதாக பதிலளிப்பதோடு சரி, எந்த நடவடிக்கையும் இல்லை.
இது குறித்து, அப்பகுதியைச் சேர்ந்த சாய்ராம் என்பவர் கூறியதாவது:
திறந்திருக்கும் மின் பெட்டிகளால், உயிர்பலி பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக, மாகாளியம்மன் கோவில் தெரு, பஜனை கோவில் தெரு உள்ளிட்ட பள்ளி மாணவர்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியிலும், மின்பெட்டி திறந்த நிலையில், சேதமடைந்து காணப்படுகிறது. மின்வாரிய அதிகாரிகள் மின்பெட்டிகளை சீரமைத்து உயர்த்த வேண்டும். இல்லாவிட்டால், மழைக்காலத்தில் பெரும் பிரச்னை ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

