ADDED : நவ 17, 2025 03:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராயபுரம்: தினமலர் செய்தி எதிரொலியாக, புதை மின் வடங்கள் முறையாக புதைக்கப்பட்டன.
ராயபுரம் கல்லறை சாலையில், மின்வாரிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதன் எதிரே உள்ள மின் இணைப்பு பெட்டி சாய்ந்த நிலையிலும், புதை மின் வடங்கள் அதன் அருகே முறையாக புதைக்கப்படாமலும் இருந்தன.
இதனால் மகப்பேறு மருத்துவமனைக்கு, கர்ப்பிணியர் நடந்து செல்லும்போது, மின் விபத்து ஏற்படும் அபாயம் இருந்தது. இது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக, சாய்ந்த மின் இணைப்பு பெட்டி மாற்றி அமைக்கப்பட்டு, மின்வடங்களும் முறையாக புதைக்கப்பட்டன.

