/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பைக் மோதி விபத்து மின் ஊழியர் இறப்பு
/
பைக் மோதி விபத்து மின் ஊழியர் இறப்பு
ADDED : அக் 22, 2024 12:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மணலி, மீஞ்சூரைச் சேர்ந்தவர் பாலு, 54; மணலி துணை மின் நிலைய லைன் இன்ஸ்பெக்டர். இவர், நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போல் பணியை முடித்து வீடு திரும்பினார்.
மணலி விரைவு சாலை - எம்.எப்.எல்., சந்திப்பில், சாலையை கடக்க முயன்றார். அப்போது, மணலியில் இருந்து எண்ணுார் நோக்கி சென்ற பைக், பாலு மீது மோதியது. இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. விபத்தை ஏற்படுத்தியவர் பைக்குடன் தப்பினார்.
பாலுவை அக்கம் பக்கத்தினர் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி நள்ளிரவு உயிரிழந்தார். சம்பவம் குறித்து, செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.