/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் பலி
/
மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் பலி
ADDED : நவ 24, 2025 03:46 AM

மாதவரம்: மோட்டாரில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்ட எலக்ட்ரீஷியன், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
மாதவரம் அடுத்த மாத்துார் எம்.எம்.டி.ஏ., காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஹேமந்த் கிருஷ்ணா, 25; எலக்ட்ரீஷியன். இவர், பெருமாள் கோவில் தெருவில் உள்ள வீட்டில், தண்ணீர் மோட்டாரில் ஏற்பட்ட பழுதை நீக்கும் பணியில், நேற்று முன்தினம் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில், ஹேமந்த் கிருஷ்ணா உயிரிழந்தது தெரிய வந்தது.
சம்பவம் குறித்து மாதவரம் பால்பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.

