தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் பலி

மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் பலி

மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் பலி


ADDED : செப் 30, 2026 03:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 30, 2026 03:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நெசப்பாக்கம்: பணியின்போது மின்சாரம் பாய்ந்து, 31 வயது எலக்ட்ரீஷியன் பரிதாபமாக உயிரிழந்தார்.

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்தானம், 31; எலக்ட்ரீஷியன். இவர், சென்னை, சூளைப்பள்ளம், ஸ்டாலின் தெருவில் தங்கி பணிபுரிந்து வந்தார்.

கடந்த 28ம் தேதி காலை நெசப்பாக்கம், கானு நகர் 11வது தெருவில் உள்ள குமார், 57 என்பவரது வீட்டில் கட்டடப் பணி நடந்தது. அங்கு பணியில் ஈடுபட்டிருந்த சந்தானத்தின் கை, எதிர்பாராத விதமாக உயர் மின்னழுத்த மின் கம்பியில் உரசியுள்ளது. இதில், மின்சாரம் பாய்ந்து பலத்த காயமடைந்தார்.

சக தொழிலாளர்கள் அவரை மீட்டு, இதையடுத்து கே.கே.நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு, நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து எம்.ஜி.ஆர்., நகர் போலீசார் விசாரிக்கின்றனர். உயிரிழந்த சந்தானத்திற்கு பாண்டீஸ்வரி என்ற மனைவி உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us