/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஸ்பென்சரில் எலக்ட்ரீஷியன் உயிரிழப்பு
/
ஸ்பென்சரில் எலக்ட்ரீஷியன் உயிரிழப்பு
ADDED : ஜூலை 26, 2025 11:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ., காலனியைச் சேர்ந்தவர் பாலாஜி, 36. இவர் 'ஸ்பென்சர் பிளாசா' வணிக வளாகத்தில் எலக்ட்ரீஷியனாக பணிபுரிந்து வந்தா ர்.
நேற்று முன்தினம் மதியம், மின் வடத்தில் ஏற்பட்ட பழுதை நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, மின்சாரம் பாய்ந்து இரு கைகளிலும் தீக்காயமடைந்தார்.
சக ஊழியர்கள் அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு, நேற்று காலை அவர் உயிரிழந்தார். ஆயிரம்விளக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

