ADDED : ஆக 11, 2025 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:அயனாவரம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சரவணன், 53; மின்வாரிய ஊழியர். இவர், பணிப்பளு காரணமாக, சில தினங்களாக மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.
நேற்று முன்தினம், வீட்டில் மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதை அறிந்த மகன் பிரவீன், அயனாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.