ADDED : ஜூன் 01, 2025 12:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, தண்டையார்பேட்டை, அம்பத்துாரில் வரும் 3ம் தேதி காலை, 11:00 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் நடக்கின்றன.
* அம்பத்துார்: செயற்பொறியாளர் அலுவலகம், 3வது மெயின் ரோடு, துணை மின் நிலைய வளாகம், அம்பத்துார் தொழிற்பேட்டை - 58.
* தண்டையார்பேட்டை: செயற்பொறியாளர் அலுவலகம், எண். 805, டி.எச்.ரோடு, மணிக்கூண்டு எதிரில், தண்டையார்பேட்டை - 21.
மேற்கண்ட இரு இடங்களில் நடக்கும் குறைதீர் கூட்டங்களில், அப்பகுதியில் வசிப்போர் பங்கேற்று மின்சாரம் தொடர்பான குறைகளை மின் வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்து, பயன்பெறலாம்.