/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இன்று 4 இடங்களில் மின் குறைதீர் கூட்டம்
/
இன்று 4 இடங்களில் மின் குறைதீர் கூட்டம்
ADDED : நவ 04, 2025 12:15 AM
சென்னை: சென்னை மயிலாப்பூர், தண்டையார்பேட்டை, அம்பத்துார், கே.கே.நகர் ஆகிய இடங்களில், இன்று காலை 11:00 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் நடக்கின்றன.
அதன்படி,
மயிலாப்பூர்: செயற்பொறியாளர் அலுவலகம், 110 கிலோ வோல்ட் திறன் உடைய வள்ளுவர் கோட்டம் துணை மின் நிலைய வளாகம், எண். 97, கோடம்பாக்கம்.
அம்பத்துார்: செயற்பொறியாளர் அலுவலகம், 3வது மெயின் ரோடு, துணை மின் நிலைய வளாகம், அம்பத்துார் தொழிற்பேட்டை.
தண்டையார்பேட்டை: செயற்பொறியாளர் அலுவ லகம், எண். 805, டி.எச்.ரோடு, மணிக்கூண்டு எதிரில், தண்டையார் பேட்டை.
கே.கே.நகர்: செயற்பொறியாளர் அலுவலகம், 2வது தளம் 110 கிலோ வோல்ட் திறன் உடைய கே.கே.நகர் துணை மின் நிலைய வளாகம், கே.கே.நகர்.

