/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அடையாறில் நாளை மின் குறைதீர் கூட்டம்
/
அடையாறில் நாளை மின் குறைதீர் கூட்டம்
ADDED : செப் 03, 2025 12:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, வேளச்சேரி பிரதான சாலையில், 110/ 33 கிலோ வோல்ட் திறனில், வேளச்சேரி துணை மின் நிலையம் உள்ளது. அந்த வளாகத்தில் உள்ள அடையாறு செயற்பொறியாளர் அலுவலகத்தில், நாளை காலை 10:30 மணிக்கு, மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது.
இதில், அடையாறு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மின் நுகர்வோர் பங்கேற்று, மின் தடை, மின் கட்டணம், சேவை குறைபாடு உள்ளிட்ட, மின்சாரம் தொடர்பான குறைகளை மின் வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்து பயன்பெறலாம்.