/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பகலிலும் ஒளிரும் விளக்குகளால் மின்சாரம் வீண்
/
பகலிலும் ஒளிரும் விளக்குகளால் மின்சாரம் வீண்
ADDED : ஜன 07, 2025 12:24 AM

அம்பத்துார் தொழிற்பேட்டையில் 2,000க்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இங்கு, சூரிய மின் சக்தி வாயிலாக இயங்க கூடிய மின் விளக்குகள், கடந்த சில மாதங்களுக்கு முன் அமைக்கப்பட்டன. அதில், சில மின் விளக்குகள் பகலிலும் ஒளிர்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக, அம்பத்தூர் தொழிற்பேட்டை ஆம்பிட் பார்க் சாலையில், 24 மணி நேரமும் தெரு விளக்குகள் ஒளிர்கின்றன. பிரதான சாலைகளிலும், மின் விளக்குகள் பகலில் ஒளி வீசுகிறது.
இதனால், மின்சாரம் வீணாவதுடன், தெரு விளக்குகளின் ஆயுட்காலம் குறைந்து விடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின் விளக்குகளை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- குமரேசன்,
சமூக ஆர்வலர்,
அம்பத்துார்.