/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வாடகைதாரர் காலி செய்தாலும் மின் கட்டண நிலுவையை உரிமையாளர் செலுத்த வேண்டும் மின் குறைதீர்ப்பாளர் உத்தரவு

ADDED : செப் 11, 2025 02:31 AM
சென்னை,: 'வாடகைதாரர் காலி செய்தாலும், மின் கட்டண நிலுவையை உரிமையாளர் செலுத்த வேண்டும்' என, மின் குறைதீர்ப்பாளர் உத்தரவிட்டுஉள்ளார்.
சென்னை கொளத்துாரை சேர்ந்த கண்ணன் என்பவர், தனக்கு சொந்தமான இடத்தை, 2020 அக்., முதல், 2022 மார்ச் வரை ஒரு நிறுவனத்துக்கு வாடகைக்கு விட்டிருந்தார்.
அங்கு, காகித பொருட்களை உற்பத்தி செய்து வந்த வாடகைதாரர், மின் பயன்பாட்டு கட்டணத்தை தொடர்ந்து செலுத்தி வந்தார்.
வாடகைதாரர், 2022 மார்ச்சில் இடத்தை காலி செய்தார். அந்த மின் இணைப்பை, அந்தாண்டு ஜூனில் மின் வாரிய அதிகாரிகள் சோதனை செய்தனர்.
மின் பயன்பாட்டை குறைத்து கணக்கு எடுத்திருப்பது, மீட்டர் எரிந்திருந்தது உள்ளிட்ட தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
அந்த மின் இணைப்பை துண்டிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. அதை செய்யவில்லை.
பின், அமலாக்க பிரிவு சோதனை செய்தனர். அதன் அடிப்படையில், 2024 மார்ச்சில், 6.64 லட்சம் ரூபாய் மின் கட்டண நிலுவையை செலுத்தமாறு நுகர்வோருக்கு, மின் வாரியம், 'நோட்டீஸ்' அனுப்பியது.
இதை ரத்து செய்யக்கோரி சம்பந்தப்பட்ட நுகர்வோர், மின் குறைதீர் குறைதீர் மன்றத்தில் மனு அளித்தார். அங்கு, அவரின் மனு நிராகரிக்கப்பட்டது.
பின், மின்சார ஒழுங்குறை ஆணையத்தின் மின் குறைதீர்ப்பாளரிடம் மேல்முறையீடு செய்தார்.
இதை விசாரித்த மின் குறைதீர்ப்பாளர், 'மேல்முறையீட்டாளர் பதிவு செய்யப்பட்ட மின் நுகர்வோர் என்பதாலும், ஒப்பந்தம் நடைமுறையில் இருப்பதாலும், அவர் நிலுவைத் தொகையை செலுத்த சட்டப்பூர்வமாக கடமைப்பட்டு இருக்கிறார்' என, தெரிவித்துள்ளார்.
மேலும், 'மின் இணைப்பை துண்டிக்க, மின் வாரியம் தவறியுள்ளது. இரு ஆண்டுகள் கழித்து நோட்டீஸ் அனுப்பியது மின் வாரியத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது' என, தெரிவித்துள்ளார்.