தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மேம்பால ரயில் சேவை: கருத்து கேட்குது 'கும்டா'

 மேம்பால ரயில் சேவை: கருத்து கேட்குது 'கும்டா'

 மேம்பால ரயில் சேவை: கருத்து கேட்குது 'கும்டா'


ADDED : டிச 23, 2025 04:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 23, 2025 04:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரையிலான மேம்பால ரயில் நிலையங்களில் பயணியர் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து, 'கும்டா' கருத்து கேட்பை துவக்கியுள்ளது.

சென்னையில் கடற்கரை முதல் பரங்கிமலை வரையிலான மேம்பால ரயில் திட்டத்தில், தற்போது கடற்கரை - வேளச்சேரி வரையே ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இவற்றின் பயன்பெறுவோரின் எண்ணிகை, ஒரு லட்சத்தில் இருந்து, 50,000 ஆக குறைந்து விட்டது. இந்த ரயில் சேவை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

இந்நிலையில், மேம்பால ரயில் சேவையில் பயணியர் சந்திக்கும் சிரமங்கள் குறித்து, தனியார் நிறுவனம் வாயிலாக, 'கும்டா' என்ற போக்குவரத்து குழுமம், கருத்து கேட்பை நேற்று துவக்கியது. கடற்கரை முதல் வேளச்சேரி வரை, 13 இடங்களில் பயணியரிடம் கருத்து கேட்பு நடந்தது.

பிரச்னைகள் மட்டுமின்றி தேவைப்படும் கூடுதல் வசதிகள், இணைப்பு போக்குவரத்து வசதிகள் குறித்தும், பயணியரிடம் கருத்துகள் பெறப்படுவதாக அதிகாரிகள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us