/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பல்பொருள் அங்காடியில் பதுங்கியிருந்து ரூ.1.38 லட்சம் திருடிய ஊழியர் கைது
/
பல்பொருள் அங்காடியில் பதுங்கியிருந்து ரூ.1.38 லட்சம் திருடிய ஊழியர் கைது
பல்பொருள் அங்காடியில் பதுங்கியிருந்து ரூ.1.38 லட்சம் திருடிய ஊழியர் கைது
பல்பொருள் அங்காடியில் பதுங்கியிருந்து ரூ.1.38 லட்சம் திருடிய ஊழியர் கைது
ADDED : ஜூலை 22, 2025 12:43 AM
சென்னை, பல்பொருள் அங்காடியில் யாருக்கும் தெரியாமல் பதுங்கியிருந்து, 1.38 லட்சம் ரூபாய் திருடிய ஊழியரை, எழும்பூர் போலீசார் நேற்று கைது செய்தனர்.
எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள பல்பொருள் அங்காடியில், மேலாளராக பணிபுரிந்து வருபவர் அப்துல் ரகுமான், 40. கடந்த, 16ம் தேதி இரவு அங்காடியை மூடிவிட்டுச் சென்றார்.
மறுநாள் காலை அங்காடியை திறந்து பார்த்தபோது கல்லாவில் வைத்திருந்த, 1.38 லட்சம் ரூபாய் திருடுபோனது தெரியவந்தது.
இதுகுறித்து, அப்துல்ரகுமான் அளித்த புகாரையடுத்து, எழும்பூர் போலீசார் வழக்கு பதிந்து, அங்காடி கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
ஆய்வில், கடையில் பணிபுரிந்து வந்த, தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையை சேர்ந்த தமீம் அன்சாரி, 31, திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடமிருந்து, 22,000 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:
வேலையை விட்டுச் சென்ற தமீம் அன்சாரி, சமீபத்தில் பல்பொருள் அங்காடியில் மீண்டும் பணியில் சேர்ந்துள்ளார். சம்பவத்தன்று, அங்காடியை பூட்டிவிட்டு அனைவரும் சென்றபோதும், யாருக்கும் தெரியாமல் அங்காடியிலேயே பதுங்கியுள்ளார்.
நண்பருடன் சேர்ந்து திட்டமிட்டு, அங்காடி கண்காணிப்பு கேமராவை, வெள்ளை காகிதம் கொண்டு மறைத்துவிட்டு பணத்தை திருடிவிட்டு, பின் வழியாக தப்பிச் சென்றுள்ளனர்.
இவ்வாறு போலீசார் கூறினார்.
***