/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பணி நேரத்தில் வெளியே சென்ற ஊழியர் தட்டிக்கேட்ட மேலாளர் அடித்து கொலை
/
பணி நேரத்தில் வெளியே சென்ற ஊழியர் தட்டிக்கேட்ட மேலாளர் அடித்து கொலை
பணி நேரத்தில் வெளியே சென்ற ஊழியர் தட்டிக்கேட்ட மேலாளர் அடித்து கொலை
பணி நேரத்தில் வெளியே சென்ற ஊழியர் தட்டிக்கேட்ட மேலாளர் அடித்து கொலை
ADDED : பிப் 09, 2025 12:50 AM

மணலிபுதுநகர் ஆந்திர மாநிலம், கூடூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாய்பிரசாத், 45; மணலிபுதுநகர் அடுத்த, விச்சூர் - வெள்ளிவாயலில் உள்ள 'கமல் எண்டர்பிரைசஸ் கன்டெய்னர்' பணிமனையில் மேலாளராக பணிபுரிந்தார்.
இதே பணிமனையில், தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பாலாஜி, 26, மணலிபுதுநகர், நாப்பாளையத்தைச் சேர்ந்த ஷியாம், 20, சாய்சாரதி, 23, முகிலன், 25, ஆகிய நால்வரும், கன்டெய்னர் பெட்டிகளுக்கு கொக்கி மாட்டும் வேலை பார்த்து வந்தனர்.
இந்நிலையில், 6ம் தேதி, பாலாஜி, வேலை நேரம் முடிவதற்குள் பாதியிலேயே சென்றுவிட்டார்.
இதையறிந்த மேலாளர் சாய்பிரசாத், நேற்று முன்தினம் மாலை, பாலாஜியை அழைத்து கண்டித்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், பாலாஜியை வேலைக்கு வர வேண்டாம் என, மேலாளர் கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாலாஜி, நேற்று அதிகாலை, கன்டெய்னர் பணிமனைக்கு சென்று, மேலாளரிடம் பேச வேண்டும் என, காவலாளியிடம் தெரிவித்துவிட்டு, சாய்பிரசாத் அறைக்கு சென்றுள்ளார்.
அங்கு, துாங்கி கொண்டிருந்த சாய்பிரசாத்தை எழுப்பி பிரச்னை செய்துள்ளார். அப்போது, பணிமனையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பாலாஜியின் நண்பர்கள், சுத்தியல் மற்றும் இரும்பு கம்பியை எடுத்து வந்துள்ளனர்.
நான்கு பேரும் சேர்ந்து, சாய்பிரசாத்தை பலமாக தாக்கி தப்பியோடினர். தலையில் பலத்த காயம் ஏற்பட்ட சாய்பிரசாத், சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவலறிந்த, மணலிபுதுநகர் போலீசார், கொலையான சாய்பிரசாத்தின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மேலும், வழக்கு பதிவு செய்து, கொலையில் தொடர்புடைய பாலாஜி, ஷியாம் உள்ளிட்ட நால்வரை, தீவிரமாக தேடி வருகின்றனர்.