/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நந்தனம் கல்லுாரியில் 29ல் வேலைவாய்ப்பு முகாம்
/
நந்தனம் கல்லுாரியில் 29ல் வேலைவாய்ப்பு முகாம்
ADDED : மார் 20, 2025 12:29 AM
சென்னை சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில், மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் 29ம் தேதி நடக்கிறது.
இம்முகாம், நந்தனம் அரசு கலை கல்லுாரியில், காலை 8:00 - 3:00 மணி வரை நடக்கிறது. இதில், 200 முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று, 2,000 காலி பணியிடங்களுக்கு, ஆட்களை தேர்வு செய்ய உள்ளன.
எட்டாம் வகுப்பு முதல், பொறியில் பட்டம், கணினி அறிந்தவர், தையல் கற்றவர் என, அனைத்து தரப்பினரும் பங்கேற்கலாம்.
அனுமதி இலவசம் என்பதால், பங்கேற்க விரும்புவோர், www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில், பதிவு செய்யலாம்.
விபரங்களுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.