/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மனநலம் குன்றிய 31 பேருக்கு வேலைவாய்ப்பு
/
மனநலம் குன்றிய 31 பேருக்கு வேலைவாய்ப்பு
ADDED : டிச 10, 2025 05:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை அண்ணாநகரில் உள்ள, ஸ்கிசோர்ப்ரினியா ஆராய்ச்சி அறக்கட்டளையான, 'ஸ்கார்ப்' அலுவலகத்தில், மனநல குறைபாடு உள்ளவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடந்தது.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உட்பட பல நிறுவனங்கள் பங்கேற்று, தகுதிக்கேற்ப ஆட்களை தேர்வு செய்தன. இந்த முகாமில், 60க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிலையில், 31 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன.
இதுகுறித்து, அறக்கட்டளை நிர்வாகிகள் கூறுகையில், 'மன நல பாதிப்புக்கு உள்ளானவர்களை புறக்கணிக்கக் கூடாது. அவர்களும் இயல்பான வாழ்க்கை வாழ தகுதியானவர்கள். அந்த அடிப்படையில் வே லைவாய்ப்பு தரப்பட்டுள்ளது' என்றனர்.

