/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பறிமுதல் வாகனங்களை நிறுத்தி மிதிவண்டி பாதை ஆக்கிரமிப்பு
/
பறிமுதல் வாகனங்களை நிறுத்தி மிதிவண்டி பாதை ஆக்கிரமிப்பு
பறிமுதல் வாகனங்களை நிறுத்தி மிதிவண்டி பாதை ஆக்கிரமிப்பு
பறிமுதல் வாகனங்களை நிறுத்தி மிதிவண்டி பாதை ஆக்கிரமிப்பு
ADDED : பிப் 23, 2024 12:24 AM

கே.கே., நகர், கே.கே., நகர் மிதிவண்டி பாதையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.
சென்னையில், மிதிவண்டி போக்குவரத்தை ஊக்குவிக்க, கோடம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட ராமசாமி சாலை, லட்சுமணசாமி சாலை, பி.டி.ராஜன் சாலை ஆகிய மூன்று சாலைகளில், 13 கோடி ரூபாய் செலவில், மிதிவண்டி பாதை அமைக்கப்பட்டது. இந்நிலையில், மிதிவண்டி பாதையை பலர் ஆக்கிரமித்து, கடைகள் மற்றும் வேன், கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால், பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட நவீன நடைபாதை எந்த பயனுமின்றி உள்ளது.
இதில், கே.கே., நகர் காவல் நிலையம் முன், வழக்குகளில் சம்பந்தப்பட்ட இருசக்கர வாகனங்களை, மிதிவண்டி பாதையில் போலீசார் நிறுத்தி வைத்துள்ளனர்.
இதே காவல் நிலையத்தின் எதிரே உள்ள சிவன் பூங்கா சாலையோரமும், வழக்கில் சிக்கி பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும், கே.கே., நகர் காவல் நிலையம் அமைந்துள்ள பி.டி.ராஜன் சாலையில், சமீபத்தில் நடைபாதையை ஆக்கிரமித்து அதிக அளவில் தள்ளுவண்டி கடைகள் அதிகரித்துள்ளன.
எனவே, நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற, மாநகராட்சி அதிகாரிகள் முன்வர வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.