/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நீர்வழித்தடங்களில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள இடங்கள் ஆக்கிரமிப்பு
/
நீர்வழித்தடங்களில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள இடங்கள் ஆக்கிரமிப்பு
நீர்வழித்தடங்களில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள இடங்கள் ஆக்கிரமிப்பு
நீர்வழித்தடங்களில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள இடங்கள் ஆக்கிரமிப்பு
ADDED : ஜன 20, 2024 12:54 AM

மாதவரம்சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம், 32வது வார்டுக்குட்பட்ட புத்தகரம் பகுதியில், புழல்- -- தாம்பரம் புறவழிச் சாலையை ஒட்டி, நீர்வள ஆதாரத்துறைக்கான நீர்வழித்தடம் உள்ளது. சென்னை குடிநீர் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த இடம், நான்கு ஆண்டுகளாக, சிறிது சிறிதாக கடை, வீடு, கோவில் என பல்வேறு வகையில், தனியாரின் ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளது.
அவற்றின் தற்போதைய சந்தை மதிப்பு, பல கோடி ரூபாய். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை குடிநீர் வாரியம் மற்றும் நீர்வள ஆதாரத்துறையினர் இதுவரை, ஆக்கப்பூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதனால், மாதவரம் மண்டல எல்லையான, சூரப்பட்டு, சிவப்பிரகாசம் நகர் முதல் புழல் ஏரிக்கரை வரை, புதிய ஆக்கிரமிப்புகள் வேகமாக உருவாகின்றன.
ஆரம்பத்தில், தற்காலிக கூரை மற்றும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, பின் கட்டடமாக மாறிவிடுகின்றன.
குடிநீர், மின்சாரம், சாலை உள்ளிட்ட, அடிப்படை வசதிகளும் அதிகாரிகளால் தாராளமாக வழங்கப்படுகிறது. அதன் பிறகு, மழை வெள்ள பாதிப்பு மற்றும் குடிநீர் வாரிய மேம்பாட்டு பணியின் போது தான், அந்த ஆக்கிரமிப்புகள் வெளிச்சத்திற்கு வருகின்றன. அப்போது, அவற்றை அகற்றுவது, அரசுக்கு சவாலாகி விடுகிறது.
இது குறித்து, அம்பத்துாரை சேர்ந்த சமூக ஆர்வலரான பா.ரமேஷ் கூறியதாவது:
நீர்நிலை மற்றும் நீர்வழித்தட ஆக்கிரமிப்புகள் குறித்த புகார்களை, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வுக்கு கூட எடுத்துக்கொள்வதில்லை. அதனால், சூரப்பட்டு, புத்தகரம் பகுதிகளில், அம்பத்துார்- - புழல் நெடுஞ்சாலை, தாம்பரம் புறவழிச்சாலை ஆகியவற்றில், நாளுக்கு நாள் புதிய ஆக்கிரமிப்புகள் உருவாகின்றன.
பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆக்கிரமிப்பு இடங்களை இப்போது மீட்காவிட்டால், மேலும் பல புதிய ஆக்கிரமிப்புகள் உருவாகும் நிலை ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.