/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோயம்பேடு சந்தை சாலையில் ஆக்கிரமிப்பால் விபத்து அபாயம்
/
கோயம்பேடு சந்தை சாலையில் ஆக்கிரமிப்பால் விபத்து அபாயம்
கோயம்பேடு சந்தை சாலையில் ஆக்கிரமிப்பால் விபத்து அபாயம்
கோயம்பேடு சந்தை சாலையில் ஆக்கிரமிப்பால் விபத்து அபாயம்
ADDED : ஜூலை 23, 2025 12:19 AM

கோயம்பேடு,:கோயம்பேடு சந்தை சாலையில், தள்ளுவண்டி கடைகள் மற்றும் பள்ளத்தால் நெரிசல் நிலவி வருகிறது.
கோயம்பேடு சந்தை, பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் காளியம்மன் கோவில் தெருவை இணைக்கும் முக்கிய சாலையாக, 'கோயம்பேடு சந்தை - இ' சாலை உள்ளது.
இச்சாலையில், ஆம்னி பேருந்து நிலையம், கோயம்பேடு காவல் நிலையம், சி.எம்.டி.ஏ., அலுவலகம் ஆகியவை அமைந்துள்ளன. இச்சாலை வழியாக ஆம்னி பேருந்துகள், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வரும் அரசு பேருந்துகள் என, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
மெட்ரோ ரயில் பணி மற்றும் மழைநீர் வடிகால் பணியால், இச்சாலை குறுகலாகியுள்ளது. தற்போது, இச்சாலையில் தள்ளுவண்டி கடைகள் அதிகரித்துள்ளன. எனவே, தள்ளுவண்டி கடைகளை முறைப்படுத்த வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.
அத்துடன், இச்சாலையில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் நடந்தன. அப்போது, மின் வாரிய கேபிள் பழுதடைந்ததாக கூறப்படுகிறது.
அதை சீர்செய்ய, அதே சாலையில் உள்ள சி.எம்.டி.ஏ., அலுவலகம் அருகே பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.
இந்த பள்ளம் மற்றும் அதை சுற்றிய பகுதிகளில், கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. மேலும், பள்ளத்தை சுற்றி தடுப்புகள் அமைக்கப்படாததால், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.