/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஜி.என்.செட்டி சாலையில் நடைபாதை ஆக்கிரமிப்பு
/
ஜி.என்.செட்டி சாலையில் நடைபாதை ஆக்கிரமிப்பு
ADDED : ஆக 21, 2025 01:01 AM

சென்னை, தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில், நடைபாதைகளை ஆக்கிரமித்து நடத்தப்படும் சிற்றுண்டி கடைகளை அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
தேனாம்பேட்டை மண்டலம் தி.நகரில் உள்ள ஜி.என்.,செட்டி சாலையின் இருபுறமும், பாதசாரிகள் வசதிக்காக கடந்தாண்டு, பல லட்சம் ரூபாய் செலவில் புதிதாக நடைபாதைகள் அமைக்கப்பட்டன.
இந்த நடைபாதைகளை ஆக்கிரமித்து, ஏராளமான சிற்றுண்டி, தள்ளுவண்டி கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் பாதசாரிகள், நடைபாதைகளை தவிர்த்து சாலையில் நடந்து செல்வதால் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
தவிர, சிற்றுண்டி, தள்ளுவண்டி கடைகளுக்கு சாப்பிட வருவோர், தங்கள் வாகனங்களை சாலையை ஆக்கிரமித்து நிறுத்துவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:
ஜி.என்.,செட்டி சாலையில், நடைபாதைகளை ஆக்கிரமித்து ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. அக்கடைகளில் இருந்து வெளியேறும் புகை, அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகளின் கண்களில் எரிச்சலை ஏற்படுத்துகிறது. இதனால் சிறு, சிறு விபத்துகள் நடக்கின்றன.
ஆக்கிரமிப்பு கடைகளால் நடைபாதைகள் மாயமாகி வருகின்றன. இதனால், பாதசாரிகள் நடந்து செல்ல வழியின்றி விபத்தில் அடிபடும் சூழல் உள்ளது.
விபத்தில் உயிரிழப்பு ஏற்படும் முன், நடைபாதை கடைகளை, மாநராட்சி அதிகாரிகள் அகற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.