/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வேளச்சேரி சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றம்
/
வேளச்சேரி சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED : ஏப் 22, 2025 12:39 AM

வேளச்சேரி, அடையாறு மண்டலம், 177வது வார்டு, வேளச்சேரி ரயில்வே சாலையை ஒட்டி அரசு இடம் உள்ளது. இதில், சாலை, நீர்வழிபாதை செல்கிறது.
இந்த இடத்தை, 20க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமித்து உள்ளனர். நீர்வழிபாதை ஆக்கிரமிப்புகளை, ஜூன் 12ம் தேதிக்குள் அகற்ற, வேளச்சேரி தாசில்தாருக்கு, உயர் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
இந்நிலையில், ஆக்கிரமிப்பாளர்களில் சிலர், காலி இடங்களில் சிலரை குடியமர்த்த முடிவு செய்துள்ளனர்.
இதற்காக, கொட்டகை அமைத்து மஹாராஷ்டிராவில் இருந்த தொழில் நிமித்தமாக வந்துள்ளோரை தங்க வைத்தனர். நாட்டு மருத்து கடையையும் சிலர் வைத்திருந்தனர்.
அதிகாரிகளின் நடவடிக்கையை திசை திருப்ப, புதிய ஆக்கிரமிப்பாளர்களை அமர்த்தியது தெரிந்தது.
இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள், போலீஸ் பாதுகாப்புடன் சென்று, அரசு இடத்தை ஆக்கிரமித்து அமைத்திருந்த கொட்டகையை நேற்று அகற்றினர். மீண்டும் ஆக்கிரமித்தால், கைது நடவடிக்கை எடுக்கப்படும் என, அவர்களை எச்சரித்து அங்கிருந்து அனுப்பினர்.