/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எண்டோஸ்கோபிக்' முறையில் புற்றுநோய் கட்டி அகற்றம்
/
எண்டோஸ்கோபிக்' முறையில் புற்றுநோய் கட்டி அகற்றம்
ADDED : ஜன 28, 2025 12:23 AM

சென்னை, ஜன. 28-
மார்பக மறுசீரமைப்புடன், 'எண்டோஸ்கோபிக் மாஸ்டெக்டோமி' வாயிலாக, புற்றுநோய் பாதித்த பகுதியை மட்டும் அகற்றும் சிகிச்சையை, அப்பல்லோ புரோட்டான் புற்றுநோய் மைய டாக்டர்கள், வெற்றிகரமாக செய்துள்ளனர்.
இதுகுறித்து, மருத்துவமனையின் மார்பக ஆன்கோ பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் மஞ்சுளா ராவ் கூறியதாவது:
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த, 48 வயது பெண், மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வழக்கமாக, மார்பகத்தை அகற்றும் சிகிச்சை மற்றும் மார்பகத்தை முழுமையாக திறந்து, பாதிக்கப்பட்ட பகுதியை அகற்றும் அறுவை சிகிச்சையை அவர் விரும்பவில்லை.
இதனால், 'எண்டோஸ்கோபிக் மாஸ்டெக்டோமி' சிகிச்சை முறையில், 2.5 செ.மீ., அளவில், மார்பகத்தின் பக்கவாட்டில் சிறிய கீறல் வாயிலாக, புற்றுநோய் பாதித்த பகுதியை மட்டும் அகற்றி, மீண்டும்பழைய நிலையில் மார்பகம் மறுசீரமைக்கப்பட்டது.
இந்தியாவிலேயே முதல் முறையாக, இச்சிகிச்சை முறையை, அப்பல்லோ புரோட்டான் புற்றுநோய் மையம் செய்துள்ளது. இந்நோயாளி மறுநாளே இயல்பு நிலைக்கு திரும்பி, தற்போது நலமுடன் உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.

