/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பரங்கிமலை அருகே ரயில் மோதி இன்ஜினியரிங் மாணவர்கள் பலி
/
பரங்கிமலை அருகே ரயில் மோதி இன்ஜினியரிங் மாணவர்கள் பலி
பரங்கிமலை அருகே ரயில் மோதி இன்ஜினியரிங் மாணவர்கள் பலி
பரங்கிமலை அருகே ரயில் மோதி இன்ஜினியரிங் மாணவர்கள் பலி
ADDED : மே 13, 2025 12:34 AM

பரங்கிமலை:சென்னை எழும்பூரில் இருந்து புதுச்சேரி நோக்கி நேற்று முன்தினம் சென்ற மின்சார ரயில், பரங்கிமலை- - பழவந்தாங்கல் ரயில் நிலையம் இடையே, தண்டவாளத்தை கடக்க முயன்ற இரண்டு இளைஞர்கள் மீது மோதியது. இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.
மாம்பலம் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வைரவன் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் விபத்தில் இறந்தது, பெரம்பலுார் மாவட்டம், முகமது பட்டினம் பகுதியைச் சேர்ந்த முகமது நபூல், 20, மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சபீர் அகமது, 20, என தெரியவந்தது.
இருவரும், ஆதம்பாக்கத்தில் வீடு எடுத்து தங்கி, சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர்., பல்கலையில் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் நான்காம் ஆண்டு படித்து வந்துள்ளனர்.
பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையம் அருகே, கிரிக்கெட் விளையாட தண்டவாளத்தை கடந்து சென்றபோது, ரயில் மோதி பலியானதாக கூறப்படுகிறது.
இதில் ஒருவர், ரயில் வருவதை பார்க்காமல் மொபைல் போனை பார்த்தபடி தண்டவாளத்தை கடக்க முயன்றதும், அவரை காப்பாற்ற மற்றொருவர் முயன்றபோது, இருவரும் விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.