/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இங்கிலாந்து மூதாட்டி கடலில் மூழ்கி பலி
/
இங்கிலாந்து மூதாட்டி கடலில் மூழ்கி பலி
ADDED : பிப் 13, 2024 12:28 AM

மாமல்லபுரம், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மூதாட்டி, பிரிட்கெட் டெய்லர், 84. மசாஜ் தெரபிஸ்ட். இவர், தன் மகன் ரூபெர்ட் டெய்லர், 58, என்பவருடன் கடந்த பிப்., 6ம் தேதி மாமல்லபுரம் வந்தார்.
நேற்று பகல் 1:00 மணிக்கு, ஒற்றைவாடைத் தெரு பகுதி கடலில் அவர்கள் குளித்தனர். அப்போது, ராட்சத அலையில் சிக்கி நீரில் பிரிகெட் டெய்லர் மூழ்கினார்.
அப்பகுதி மீனவர்கள் கடலில் அரை மணி நேரம் தேடி, அவரது உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
மாமல்லபுரம் போலீசார், மூதாட்டியின் உடலை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தாயின் உடலை இந்தியாவிலேயே எரியூட்டி, சாம்பலை தன் தாய் நாட்டிற்கு கொண்டுசெல்ல விரும்புவதாக, மூதாட்டியின் மகன் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.