/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி
/
தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி
ADDED : அக் 18, 2024 12:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கம் தொடர்பான ஓராண்டு பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம்.
தமிழகம் மற்றும் அகமதாபாத் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் மற்றும் புத்தாக்க நிறுவனங்கள் இணைந்து, 'தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கம்' என்ற ஓராண்டு சான்றிதழ் படிப்பை, நவ., 14ல் துவக்குகின்றன.
பயன்பெற விரும்புவோர், https://oneyearcourse.editn.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
சென்னையை சேர்ந்த ஆர்வமுள்ள தொழில் முனைவோர் இந்த சான்றிதழ் படிப்பில் சேர்ந்து பயனடையலாம்.
மேலும் விபரங்களுக்கு, 86681 01638, 86681 07552, 93424 92214 என்ற எண்களில் தொடர்புக் கொள்ளலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.